சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு….

மாணவர் கொலை, பாலியல் வன்கொடுமை மற்றும் போதைப்பொருள் விவகாரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சி எழுப்பிய கேள்விகளுக்கு அரசு உரிய விளக்கமும் தெளிவான பதிலும் அளிக்கவில்லை என குற்றம்சாட்டி, திமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

குறிப்பாக, கோவை கல்லூரி மாணவர் அமுதன் கொலை தொடர்பாக கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீதான அரசின் விளக்கத்தை ஏற்க மறுத்து அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்காமல் தவெக அரசு தொடர்ந்து திமுக ஆட்சியைப் பற்றி பேசுவதாக குற்றம்சாட்டினார்.

மாணவர் கொலை தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு உரிய பதில் அளிக்காமல், திமுக மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், அமைச்சர்கள் தங்கள் துறைகள் தொடர்பான கேள்விகளுக்கு முறையாக பதிலளிப்பதில்லை என்றும், சட்டம்-ஒழுங்கு தொடர்பான அமைச்சர் சட்டப்பேரவைக்கு வரவில்லை என்றும் உதயநிதி கூறினார்.

அமுதன் கொலை விவகாரத்தில் அரசு தெளிவான விளக்கம் அளிக்கவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டினார்.

Related News

Latest News