செல்போன்கள் ஏன் வெடிக்கிறது தெரியுமா ?

249
Advertisement

ஸ்மார்ட்போன் வெடிக்கும் நிகழ்வு நமக்கு ஒன்றும் புதிதல்ல.

எவ்வளவு பிரீமியம் போனாக இருந்தாலும், சில நிறுவனங்களின் தவறுகளால் போனிலிருக்கும் லித்தியம்-ஐயன் பேட்டரி சரியாக சோதிக்கப்படாவிட்டாலோ, செயலிழந்தாலோ மற்றும் மொபைல் போனை பயன்படுத்துபவர்களின் தவறுகளாலும் இது போன்ற நிகழ்வுகள் ஏற்படுகின்றது .

மட்டமான CHARGER- ஐ பயன்படுத்தி போனை சார்ஜ் செய்வது , நீண்ட நேரம் அல்லது இரவு முழுவதும் போனை சார்ஜ் போடுவது , நேரடியாக சூரிய வெளிச்சத்தில் அதிக நேரம் மொபைல் போனை வைப்பது , இது போன்ற செயல்களால் செல்போனில் உள்ள பேட்டரி அதிக வெப்பநிலையை அடைத்து இறுதியில் வெடிக்கிறது .

எனவே இது போன்ற செயல்களை தவிர்ப்பது செல்போன் வெப்பமாவதிலிருந்து தடுத்து போனை வெடிக்காமல் பாதுகாக்கிறது .