Friday, February 14, 2025

சச்சின் டெண்டுல்கருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

இந்திய கிரிக்கெட் வாரியம் ஆண்டுதோறும் சிறந்த இந்திய வீரர், வீராங்கனைக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. இதன்படி 2024-ம் ஆண்டுக்கான விருது பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் ஜஸ்பிரித் பும்ரா ஆண்டின் சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான பாலி உம்ரிகர் விருதுக்கு தேர்வாகியுள்ளார்.

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிர்தி மந்தனா ஆண்டின் சிறந்த வீராங்கனை விருதை பெறுகிறார். இதே போல் வாழ்நாள் சாதனையாளருக்கான சி.கே.நாயுடு விருதுக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தேர்வாகியுள்ளார். மும்பையில் இன்று நடைபெறும் கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு விழாவில் அவர்களுக்கு விருது வழங்கப்படவுள்ளது.

Latest news