மத்திய அரசு கொண்டுவந்துள்ள மும்மொழிக் கொள்கைக்கு தமிழ்நாட்டில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. பாஜக மட்டும் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது.
மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக திருப்பூர் மாவட்டத்தில் வீடு, வீடாகச் சென்று கையெழுத்து பெற்று வருகின்றனர். இந்நிலையில் திருப்பூரில் ஒட்டப்பட்ட போஸ்டர் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
அந்த போஸ்டரில் ‘மோடி அரசின் மும்மொழி கல்விக் கொள்கையில் ஹிந்தி திணிப்பை கண்டுபிடித்தால், 99 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும். முதல் மொழி – தமிழ்வழிக் கல்வி கட்டாயம், இரண்டாம் மொழி – ஆங்கிலவழிக் கல்வி, மூன்றாம் மொழி – மாணவர்களின் விருப்பத் தேர்வு” என இடம்பெற்றுள்ளது.