Sunday, December 21, 2025

பட்டப் பகலில் பிரபல ரவுடி வெட்டி படுகொலை

ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு பகுதியை சேர்ந்த தர்மராஜின் மகன் அன்பு என்கிற அன்புராஜ். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை அவர் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் ஸ்ரீரங்கம் தெப்பக்குளம் அருகே வாகன நிறுத்திமிடத்தில் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாறியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அன்பு ராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டப் பகலில் பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்த கொலை சம்பவம் பொது மக்களிடையேயும் ஸ்ரீரங்கத்திற்கு வரும் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related News

Latest News