விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தமிழ்நாடு கிராம வங்கியின் ஜன்னல் கம்பியை உடைத்து, உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் கேமரா வயரை கட் செய்ய முயன்ற போது, அலாரம் அடித்ததால் தப்பி ஓடிய காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
கொள்ளை முயற்சி குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த வங்கியில் ஏற்கனவே இரண்டு முறை கொள்ளை முயற்சி நடந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.