ரஸ்க் சாப்பிடுறதுல இவ்ளோ ரிஸ்க் இருக்கா? மக்களே உஷார்!

143
Advertisement

மாலை நேரங்களில் பலருக்கும் தேநீருடன் சாப்பிட விருப்பப்படும் ரஸ்க்கில் ஒளிந்திருக்கும் ஆபத்துகள் ஏராளம்.

ரஸ்க்கில் இருக்கும் இனிப்பான சுவை வர வைப்பதற்காக அதிகப்படியான சக்கரை சேர்க்கப்படுகிறது.

இதனால், நாள் முழுவதும் அளவான சக்கரை சாப்பிடுபவர்கள் கூட, இரண்டே ரஸ்க் சாப்பிடுவதால் இரத்த சக்கரை அளவு அதிகமாகும் ஆபத்துக்கு ஆளாகிறார்கள்.

பெரும்பாலான ரஸ்க்கள் வெறும் மாவினால் தயாராவதால் அஜீரண கோளாறுகளை ஏற்படுத்துவதுடன் உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்புகளையும் அதிகரிக்கிறது. தானியங்களில் இருந்து பெறப்படும் மாவினால் செய்யப்படும் ரஸ்கில் உள்ள பைட்டிக் அமிலம் இரும்பு, சிங்க், மெக்னீசியம் மற்றும் கால்சியம் சத்துக்கள் உடலால் உறிஞ்சப்படுவதை தடுக்கிறது.

ரஸ்க்கில் உள்ள குளுட்டன் (Gluten) வகை புரதம், எளிதில் செரிமானம் ஆகாமல் பலருக்கும் உப்புசம், வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலியை ஏற்படுத்தக் கூடும். இதனால், தொடர்ச்சியாக ரஸ்க் சாப்பிடுவதை வழக்கமாக்குவதை தவிர்க்க வலியுறுத்தும் உணவியல் நிபுணர்கள்,white bread ரஸ்க்களுக்கு பதிலாக அதிக நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்த whole wheat ரஸ்க்களை சாப்பிட அறிவுறுத்துகின்றனர்.