பேயுடன் விளையாடும் நிஜ நாய்

254
Advertisement

உயிரோடுள்ள நாய் ஒன்று பேய் நாயுடன் விளையாடும் வீடியோ இணையத்தில் உலா வருகிறது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜேக் டி மார்க்கோ என்ற நபர் மெல்போர்ன் நகரில் தனது வீட்டில் கொல்லைப் புறத்துக்கு வந்தார். அப்போது தனது செல்லப் பிராணி திடீரென்று யாரையோ துரத்தித் துரத்தி விளையாடுவதையும், திடீரென்று அதனை விரட்டிச்செல்வதையும் கவனித்தார். சிறிது தூரம் சென்றதும் செல்லப்பிராணி நின்றுவிட்டது.

உடனே வேலியைத் திறந்துகொண்டு வெளியே சென்று பார்த்தார். ஆனால், அங்கு எதுவும் தென்படவில்லை. இதனால் வீட்டில் பாதுகாப்புக்காகப் பொருத்தப்பட்டுள்ள கேமராவை ஆய்வுசெய்தார்.

அதில் வீட்டின் கொல்லைப்புறத்தில் தனது செல்லப் பிராணி வெள்ளை நிறத்திலுள்ள வேறொரு நாயைத் துரத்திக்கொண்டிருப்பதைப் பார்த்தார்.

தனது வீட்டுக்குள் வேறெந்த பிராணியும் புகுந்துவிடாதபடி உயரமான இரும்பு வேலி அமைத்திருக்கும்போது இன்னொரு நாய் எப்படி உள்ளது வந்தது என்று யோசித்துக்கொண்டிருக்கும்போதே சிறிது தூரம் சென்றதும் அந்த வெள்ளை நாய் மறைந்துவிட்டது.

அப்போதுதான் மறைந்துபோன வெள்ளை நாய் பேய் என்றுணர்ந்துள்ளார்.

இந்த நிலையில், வீடியோ பதிவைத் தனது நண்பர்களுக்குக் காண்பிக்க, அவர்கள் இணையத்தில் கசியவிட்டனர்.

தற்போது இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் ஜேக்கின் செல்லப் பிராணி கொல்லைப்புறத்தில் வெள்ளை நிறம்கொண்ட மற்றொரு நாயை விளையாட்டாகத் துரத்துகிறது.