திருநெல்வேலி மாவட்டம் புறநகர் பகுதியான முக்கூடல், சுத்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் கேரளாவில் இருந்து கொண்டுவரப்பட்ட மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டது. இந்த விவகாரம் தமிழக அளவில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருந்த நிலையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் கண்டித்து. இதையடுத்து மருத்துவக் கழிவுகளை கேரள அரசு முழுமையாக அகற்ற உத்தரவிடப்பட்ட பிறகு முழுமையாக அகற்றப்பட்டது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு ஐந்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மதுரை – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை ரெட்டியார்பட்டி அருகே மீண்டும் மருத்துவ கழிவு கொட்டப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக காலாவதியான மாத்திரை,டானிக்கை மற்றும் அதிகளவு கொட்டப்பட்டுள்ளது.
மருத்துவ கழிவுகளை தீ வைத்து எரிக்கவும் முயற்சி செய்யப்பட்ட நிலையில் பாதி எரிந்த நிலையில் உள்ளது. மருத்துவக் கழிவுகளை கொட்டி வரும் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் கழிவுகளை உடனே அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்ததுள்ளது.