Friday, April 18, 2025

வலையில் சிக்கிய அரிய வகை மீன் : 4 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம்

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனின் மன்னார் வளைகுடா கடற்பகுதியிலிருந்து 90-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். இதில் அரியவகை நான்கு கூறல் மீன்கள் சிக்கின.

சுமார் 120 கிலோ எடை கொண்ட இந்த நான்கு மீன்கள், 4 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. கூறல் மீனின் வயிற்று பகுதியில் இருக்கும் நெட்டி, மதுபானங்கள் மற்றும் ஜெல்லி மிட்டாய்களின் சுவைக்காக பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news