3 ஆண் உறுப்புகளுடன் பிறந்த அரிய குழந்தை

317
Advertisement

மருத்துவ உலகின் மர்மமாக 3 ஆண் உறுப்புகளுடன் ஈராக் நாட்டின்
பாக்தாத் நகர் அருகேயுள்ள துஹாக் பகுதியில் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

மூன்று மாதக் குழந்தையாக இருந்தபோது, குழந்தையின் விதைப்பை
வீங்கியிருப்பதைக்கண்ட பெற்றோர் மருத்துவமனைக்கு குழந்தையை
எடுத்துக்கொண்டு சென்றனர். அங்கு குழந்தையைப் பரிசோதித்தபோதுதான்
3 ஆணுறுப்புகள் இருப்பதைப் பார்த்தனர்.

பிரதான ஆண் உறுப்பை ஒட்டி ஒன்றும், விதைப்பை அருகே ஒன்றும் என
கூடுதலான இரண்டு ஆண் உறுப்புகள் வளர்ந்துள்ளன. கூடுதலாக வளர்ந்துள்ள
இந்த இரண்டு உறுப்புகளிலும் சிறுநீர்க் குழாய்கள் இல்லை.

இவையிரண்டும் அறுவை சிகிச்சைமூலம் தற்போது அகற்றப்பட்டுவிட்டன.
அறுவை சிகிச்சை முடிந்து ஓராண்டு ஆகிவிட்ட நிலையில், தற்போது குழந்தை
நன்றாக இருப்பதாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.

இந்த விவரங்கள் 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாத இன்டர்நேஷனர் ஜர்னல்
ஆஃப் சர்ஜரி என்னும் இதழில் வெளியிடப்பட்டுள்ளது,

இதுபற்றி மருத்துவ ஆய்வாளர்கள் கூறியபோது, ”6 மில்லியன் குழந்தைகளுக்கு
ஒரு குழந்தை என்கிற விகிதத்தில் இதுபோன்று பிறக்கும். இதன் வளர்ச்சி
குழந்தைக்கு குழந்தை வேறுபட்டிருக்கும். 3 ஆணுப்புகளுடன் பிறந்துள்ள
குழந்தையின் நிலைக்குத் திரிபாலியா என மருத்துவத்தில் சொல்வார்கள்.
மரபணு குறைபாடு காரணமாக இவ்வாறு பிறக்கவில்லை.
இதுவரை இப்படி எந்தக் குழந்தையும் பிறந்ததாக உலகில் எங்கும்
தகவல்கள் பதிவாகவில்லை” என்று தெரிவித்துள்ளனர்.

மருத்துவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது இந்த விநோதம்.