தமிழகத்தில் இன்று (அக். 28) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழகத்தின் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. ஏனைய தமிழகப் பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.
சென்னை வானிலை: சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33–34 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25–26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை: வட தமிழக கடலோரப் பகுதிகளில் இன்று மணிக்கு 40–50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக்கூடும்.
மத்திய வங்கக்கடல் மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளில் மணிக்கு 115–125 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 140 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும். தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளிலும் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது.
இதனால், குறிப்பிட்ட கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
