இரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

248
Advertisement

கொரோன அச்சுறுத்தல் காரணமா நாடு முழுவதும் பல்வேறு முன் எச்சரிக்கை  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது . குறிப்பாக போக்குவரது கட்டுப்பாடுகள் பெருமளவு மக்களை பாதித்தது. பின் கொரோனாவின் தாக்கம் குறைய துடைங்கிய நிலையில் படி படியாக தளர்வுகளும் வழங்கியது மத்திய மற்றும் மாநில அரசுகள். 

கட்டுப்பாடுகள் காரணமாக  , ரெயில்களில் ஏ.சி. பெட்டியில் பயணம் செய்யும் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த  போர்வை , படுக்கை விரிப்பு , தலையணை உள்ளட்டவை நிதுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து உள்ளே வழங்கப்படும் உணவும் நிறுத்தப்பட்டது. 

தற்போது  கொரோனா பரவல் கட்டுப்படுத்துபட்டுவுள்ள நிலையில்   மக்களும் தங்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். இத்தருணத்தில் மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதம்  ரெயில்வே ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அதில் , கொரோனா காரணமாக நிறுத்துவிக்கப்பட்ட சில ரயில் சேவைகள் மீண்டும் வழங்கப்படும் என தெரிவித்தது .

அதன்படி இனி எக்ஸ்பிரஸ் ரெயில்களில் உள்ள ஏ.சி. பெட்டியில் பயணிகளுக்கு போர்வை , படுக்கை விரிப்பு , தலையணை உள்ளட்டவை வழங்கப்படும் என தெரிவித்து உள்ளது மேலும் இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது