Friday, January 24, 2025

மதக்கலவரங்களின் பின்னணியில் பாஜக இருக்கிறது – ராகுல் காந்தி

நாட்டில் அரசியல் சாசனம் கடைபிடிக்கப்படுவதில்லை என்று தெரிவித்துள்ள ராகுல் காந்தி, பாஜக ஆட்சியில் மனுதர்மத்தை பின்பற்றுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

மக்களவையில் இந்திய அரசியல் சட்டம் மீதான விவாதத்தில் பேசிய ராகுல் காந்தி, பாஜக அரசு நாட்டை தங்களது விருப்பத்திற்கு ஏற்ப வழிநடத்த முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார். இந்தியாவை பின்னோக்கி அழைத்துச் செய்ய முயற்சிப்பதாக தெரிவித்த ராகுல் காந்தி, அரசியல் சட்டத்தை பின்பற்றுதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் சாசனத்தை திறந்தால் மகாத்மா காந்தி, நேரு, அம்பேத்கரிகரின் சிந்தனைகள் ஒலிக்கும் என்று தெரிவித்த ராகுல் காந்தி, அரசியலமைப்பில் எழுதப்பட்டுள்ள அனைத்தும் வெவ்வேறு வடிவங்களின் ஒரே சிந்தனைதான் என்று தெரிவித்துள்ளார்.

நாட்டில் நடைபெறும் மதக்கலவரங்களின் பின்னணியில் பாஜக இருப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு தயங்குவது ஏன் என்றும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டில் உள்ள விமான நிலையங்கள், துறைமுகங்கள் அனைத்தும் அதானி வசம் சென்று விட்டதாக குற்றம் சாட்டிய ராகுல் காந்தி, இதற்காக விதிமுறைகள் மீறப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Latest news