‘அஜித்தை’ அரசியலுக்கு கொண்டுவர – ராதன் பண்டிட் பேட்டி ‘வைரல்’

தமிழக வெற்றிக் கழகத்தின் செய்தி தொடர்பாளரும், விஜயின் தனிப்பட்ட ஜோதிடருமான ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் முதலமைச்சரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக (OSD – Political) நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த விவகாரம் தற்போது பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தநிலையில் ராதன் பண்டிட்டின் பழைய பேட்டியொன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், ” அஜித்தின் ஜாதகம் மிகவும் சிறப்பாக உள்ளது. அதிர்ஷ்டசாலி, அறிவாளி, பிடிவாத குணம் கொண்டவர், இறுக்கமான சிந்தனை கொண்டவர், அதிகம் யோசிப்பவர், உழைப்பு என்றால் என்னவென்று தெரியும். 16 வயதுக்கு முன்பு அவருக்கு நிறைய விபத்துகள் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு அவருக்கு விபத்து ஏற்பட்டது.

எத்தனை விபத்துகள் ஏற்பட்டாலும், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அதிலிருந்து மீண்டு வரக்கூடியவர். கிட்டத்தட்ட எம்ஜிஆர் சாயலில் ஒருவர் சினிமாவில் இருக்கிறார் என்றால் அது அஜித் தான். பார்வையாளர்களை கவரும் அனைத்து அம்சமும் அவருக்கு உண்டு. முதல்வராகும் அனைத்து அம்சங்களும் அஜித்துக்கு உண்டு. ஆனால், அவர் சினிமாவை விட்டு அரசியலுக்கு வர வாய்ப்பு மிகவும் குறைவு. நடக்காமலும் போகலாம். இவரைப் போன்ற ஒருவரை யாராலும் பார்க்க முடியாது.

அவர் அரசியலுக்கு வந்தால் அதைவிட நல்ல காரியம் இருக்காது. ஆனால், அவர் வர வாய்ப்பில்லை. அஜித்தை அரசியலுக்கு கொண்டு வர முயற்சித்தேன். அஜித் தரப்பிலிருந்து அவருக்கு அரசியலில் விருப்பம் இல்லை என தெரிவித்து விட்டனர். அதனால் நான் அவரை விட்டு வந்துவிட்டேன். புத்திசாலியான அவர், அரசியலுக்கு வரமாட்டார் என தோன்றுகிறது,” இவ்வாறு பேசியிருக்கிறார்.

Related News

Latest News