பெங்களூருவில் உள்ள ஓரியன் மாலில் செயல்பட்டு வரும் பிவிஆர் திரையரங்கில் படம் பார்க்க வந்த ரசிகர் ஒருவர் வந்துள்ளார். தியேட்டரில் 20 நிமிடங்களுக்கு மேலாக விளம்பரம் போடப்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த நபர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கின் தீர்ப்பில் பிவிஆர் நிறுவனத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வழக்கு தொடர்ந்தவரின் மன உளைச்சலுக்காக அவருக்கு 20 ஆயிரம் ரூபாயை வழங்கவும் அதில் 8 ஆயிரம் ரூபாய் வழக்கு செலவுகளுக்காகவும் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.