போரை வழிநடத்த புதிய தளபதியை நியமித்த புதின்

352
Advertisement

உக்ரைனிக்கு எதிராக நடைபெறும் போரை வழிநடத்த ,ரஷியாவின் தெற்கு பிராந்திய ராணுவ கமாண்டரான அலெக்ஸாண்டர் ட்வார்னிகோவை புதிய கமாண்டராக நியமித்துள்ளார் புதின்.

உக்ரைன் தலைநகர் கீவ்வை தற்போது வரை ரஷியா கைப்பற்றப்படமுடியாத நிலையில், அடுத்ததாக கிழக்கு பகுதிகளை குறிவைத்து முன்னேற ரஷ்யா திட்டமிடத்துள்ளது. இந்நிலையில் போரை வழிநடத்த புதிய தலைபதியை நியமித்துள்ளார் புதின்

தகவலின்படி , கிராமடோர்ஸ்க் நகரில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் 52 பேரைக் கொன்ற ஏவுகணைத் தாக்குதலுக்குப் பின்னணியில் டுவோர்க்னிகோவ் மூளையாக செயல்பட்டதாக கூறப்படுகிறது.மேற்கத்திய ஊடக அறிக்கையின்படி, ‘சிரியாவின் கசாப்புக்காரன்’ என்றும் அலெக்ஸாண்டர் ட்வார்னிகோவ் அழைக்கப்படுகிறார்.

மே 9 ரஷ்யா வெற்றி தினம் ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது. இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியை வீழ்த்திய இந்த நாளை ரஷ்யா ஆண்டுதோறும் வெகு விமரிசையாகக் கொண்டாடி வருகிறது. அதற்குள் உக்ரைன் மீது குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற வேண்டும் என்பதற்காகவே அதிபர் புதின் போர் கமாண்டரை மாற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதன் மூலம் மே 9-ம் தேதிக்கும் உக்ரைன் மீது ரஷ்யா மற்றொரு கொடிய தாக்குதலை நடத்த கூடும் என தெரிகிறது.

https://twitter.com/MFA_Ukraine/status/1512745736789762049/photo/

பிப்ரவரி 24 முதல் உக்ரைனில் நடந்த தாக்குதலில் ரஷ்யா 19,100 இராணுவ வீரர்கள், 705 டாங்கிகள், 151 விமானங்கள் மற்றும் 136 ஹெலிகாப்டர்களை இழந்ததாக உக்ரேனிய ஆயுதப் படைகள் கூறியுள்ளன.