Monday, December 8, 2025

42 வயதில் உயிரிழந்த பிரபல ஹிந்தி நடிகர்

பஞ்சாபை சேர்ந்த நடிகர் வரிந்தர் சிங் குமான் (வயது 42). இவர் இந்தி, பஞ்சாபி மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். பாடி பில்டரான இவர் 2009ம் ஆண்டு மிஸ்டர் இந்தியா பட்டம் பெற்றார்.

இந்நிலையில், வரிந்தர் சிங், வழக்கமான பரிசோதனைக்காக நேற்று மாலை பஞ்சாபிம் அம்ரித்சரில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மருத்துவ பரிசோதனையின்போது வரிந்திர் சிங்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

Latest News