கொரோனா நோயாளி இல்லாத இடமான புதுச்சேரி

449
Advertisement

கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று பரவ தொடங்கியது. இந்தியாவிலும் கொரோனா புகுந்ததால் 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கடும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.முதல் அலை, 2-வது அலை, 3-வது அலை என புதுவை மக்கள் கொரோனாவினால் தொடர்ந்து பாதிக்கப்பட்டனர். நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 3 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டனர்.

மக்களை பாடாய்ப்படுத்தி வந்த கொரோனா தற்போது வீழ்ச்சியை நோக்கி சென்றுள்ளது. புதுவையில் கடந்த சில நாட்களாகவே பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சரிந்து வந்தது. நேற்று ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை. கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்தநிலையை புதுச்சேரி எட்டியுள்ளது.

அதாவது நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 157 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் ஒருவர்கூட தொற்றினால் பாதிக்கப்படவில்லை.இருந்தபோதிலும் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களில் 3 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 25 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 11 பேர் குணமடைந்தனர். புதுவையில் குணமடைவது 98.80 சதவீதமாக உள்ளது.