“நான் சொன்னது சரி என நிரூபித்த….” நடிகை குஷ்பு மறைமுக பதிவு!!

நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து புதிய சர்ச்சைகள் எழுந்துள்ளன. சமீபத்தில் கெனிஷாவுடன் தொடர்பு முடிவுக்கு வந்ததாக தகவல்கள் வெளியான நிலையில், இதை கெனிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதிப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ரவி மோகன், “இத்தனை நாள் அமைதியாக இருந்தது என் தவறு. விவாகரத்து கிடைக்கும் வரை நான் நடிக்கப் போவதில்லை” என்று தெரிவித்தார். கடந்த 23 ஆண்டுகளாக குடும்பத்திற்காக உழைத்ததாகவும், தனது பெரும்பாலான படங்கள் வெற்றி பெற்றுள்ளதாகவும் கூறினார். மேலும், தனது குழந்தைகளை பார்க்க அனுமதி இல்லை என்றும், அவர்கள் பள்ளிக்கு கூட பாதுகாவலர்களுடன் அனுப்பப்படுகிறார்கள் என்றும் வேதனையுடன் பேசினார்.

பெண்களின் உரிமையை மதிப்பவன் நான் என்றும், தன்னை தனது தாய் அப்படித்தான் வளர்த்தார் என்றும் அவர் கூறினார். “என் குழந்தைகளுக்காகத்தான் நான் அமைதியாக இருந்தேன். ஒரே நாளில் விவாகரத்து செய்திருக்க முடியும்” என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், “மூன்றெழுத்து இட்லி நடிகை என் வாழ்க்கையை கெடுத்தார்” என மறைமுக குற்றச்சாட்டையும் முன்வைத்தார். இந்த கருத்து சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில் நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பூ தனது எக்ஸ் தளத்தில், “சிலர் தங்கள் டிஎன்ஏவை நிரூபிப்பதில் தீவிரமாக இருக்கிறார்கள். நான் சொன்னது சரி என நிரூபித்ததற்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related News

Latest News