திண்டுக்கல் அருகே முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து பள்ளபட்டி ஊராட்சியை சேர்ந்த 50 க்கும் மேற்பட்டோர் பஞ்சாயத்து அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பள்ளபட்டி ஊராட்சியில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் கடந்த ஆறு மாதமாக எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் அப்பகுதி மக்கள் ஊராட்சி அலுவலகம் முன்பு காலி குடத்துடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த வருடம் குடிநீருக்காக பிரதம மந்திரி திட்டத்தில் 3 ஆயிரத்து 600 ரூபாய் வசூல் செய்தும், தற்போது வரை குடிநீர் வழங்கப்படவில்லை என பொதுமக்கள் வருத்தம் தெரிவித்தனர்.
மேலும் பள்ளபட்டி ஊராட்சி தலைவரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.