கரூரில் கொங்கு இளைஞர் பேரவை சார்பில் தவெக மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பொதுமக்கள் 41 பேர் உயிர் இழந்தனர் விஜயை கொலை வழக்கில் கைது செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரூர் மாவட்டத்தில் தவெக சார்பில் வேலுச்சாமி பறத்தில் கடந்த 27 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இதனை அடுத்து தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை சார்பில் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த தவெக தலைவர் விஜயை கொலை வழக்கில் கைது செய்ய வலியுறுத்தி தலைமை தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர், அருள்குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர் அணி, மாநில தலைவர் பாஸ்கர், மாநிலச் செயலாளர் கௌரிசங்கர், அரவக்குறிச்சி ஒன்றிய செயலாளர் லோகநாதன், உட்பட பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.