ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடை காரணமாக, அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தையில் தடை ஏற்பட்டுள்ளது.
ஈரானின் அணு ஆயுத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் விதமாக அந்நாட்டுடன், அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்பட 6 நாடுகளுக்கு இடையே கடந்த 2015-ம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்நிலையில், ஒப்பந்தத்தில் குறைபாடுகள் இருப்பதாக கூறி அமெரிக்கா மற்றும் ஈரான் பரஸ்பர குற்றம் சாட்டின.
இதனையடுத்து, அமெரிக்காவை தவிர்த்து இதர நாடுகள் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், அணுசக்தி ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியது.
இந்நிலையில், உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதாரத்தடை விதித்தது .
இதனால், அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டது.
இதனையடுத்து, தங்கள் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை நீக்கினால் மட்டுமே அணுசக்தி ஒப்பந்தத்திற்கு ஆதரவு தர முடியும் என ரஷ்யா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.