மேற்கு வங்காளத்தின் நாடியா மாவட்டத்தில் ஹரிங்கடா பகுதியில் அமைந்துள்ள மவுலானா அபுல் கலாம் ஆசாத் பல்கலைக்கழகத்தில் வகுப்பறையில் பேராசிரியை ஒருவர், மாணவரை திருமணம் செய்து கொள்ளும் வீடியோ இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றி விசாரணை செய்ய 3 பேராசிரியைகளை கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. விசாரணை முடியும் வரை பணிக்கு வர வேண்டாம் என கூறி அந்த பெண் பேராசிரியைக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
இந்த விவகாரம் பற்றி குழு விசாரணை நிறைவடையும் வரை, அந்த மாணவரையும் வகுப்புக்கு வரவேண்டாம் என நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.