Friday, January 24, 2025

கேரளா உட்பட 5 மாநில ஆளுநர்கள் மாற்றம் – குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உத்தரவு

கேரளா உட்பட 5 மாநிலங்களில் ஆளுநர்களை மாற்றம் செய்து குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கேரள மாநில ஆளுநராக செயல்பட்டு வந்த ஆரிப் முகமது கான், பீகார் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பீகார் ஆளுநராக இருந்த ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், கேரள மாநில ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார்.

மிசோரம் மாநில ஆளுநராக செயல்பட்டு வந்த ஹரிபாபு, ஒடிசா மாநிலத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். முன்னாள் உள்துறை செயலாளர் முன்னாள் மத்திய அமைச்சர் விஜய் குமார் சிங், மிசோரம் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அஜய் குமார் பல்லா, மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

Latest news