உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் கங்கை மற்றும் யமுனை ஆறுகள் சங்கமிக்கும் பகுதி உள்பட பல்வேறு இடங்களில் ஆற்றின் நீரில் ‘Faecal Coliform’ என்ற பாக்டீரியா அதிகளவில் இருப்பதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை வெளியிட்டது.
இதுகுறித்துப் பதிலளித்த உத்தப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், “பிரயாக்ராஜில் உள்ள ஆற்று நீர் குளிப்பதற்கு ஏற்றதுதான்; ஏன் குடிக்கவும் தான்” எனத் தெரிவித்துள்ளார். இதுபோன்ற அறிக்கைகள், மகா கும்பமேளாவை அவமதிக்கும் பிரசாரம் எனவும் தெரிவித்துள்ளார்.