திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லட்சக்கணக்கான மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கொடைக்கானலில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு இடங்களில் உயர் மின்னழுத்த கம்பங்கள் பழுதடைந்து பல மாதங்கள் ஆகியும் கொடைக்கானல் மின்வாரிய துறை மாற்றிக் கொடுக்கவில்லையன்றும் கூறப்படுகிறது.
இரவு நேரங்களில் வனவிலங்குகள் காட்டெருமை, பன்றி போன்ற வான விலங்குகள் சாலையில் சர்வசாதாரணமாக வந்து செல்வதால் மின் விளக்குகள் எரியததால் வனவிலங்கு தாக்குவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.
பழுதடைந்து இருக்கும் மின் கம்பங்கள் எப்போது முறிந்து விழும் என்று பொதுமக்களுக்கு தெரியாத நிலையில் உள்ளனர். மேலும் இவ்வாறு உடைந்து விழும் மின்கம்பங்கள் சாலையில் நடந்து செல்பவர்கள் மீதோ அல்லது அப்பகுதியில் செல்லும் வாகனங்கள் மீது விழுந்தாலோ உயிர் சேதம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன் சம்பந்தப்பட்ட கொடைக்கானல் மின்சாரத் துறையினர் சேதம் அடைந்த மின் கம்பங்களை மாற்றி விபத்துகளில் இருந்து கொடைக்கானல் பொதுமக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்கள் கருத்தாக உள்ளது.