தமிழகத்தில் பொங்கல் பண்டிகை 14-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ஏற்கனவே 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் 17-ந்தேதியும் விடுமுறை அறிவிப்பு வெளிவந்துள்ளது.
இதனால், ஜனவரி 14-ந்தேதி முதல் 19-ந்தேதி வரையிலான 6 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஜனவரி 25-ந்தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது.