டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் பல்வேறு இலவச திட்டங்களை அறிவித்துள்ள நிலையில், அவை குறித்து எஸ்.எம்.எஸ் மற்றும் கால் அழைப்புகள் மூலம் விளம்பரப்படுத்தி வருகின்றன. இதற்கு எதிரான பொதுநல மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இதுபோன்ற விளம்பரங்களை அரசியல் கட்சிகள் செய்யாமல் இருப்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்று தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாய் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது.