நாட்டின் 76-வது குடியரசு தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரேதசங்களில் ஆளுநர்கள் தேசிய கொடியேற்றி வைத்தனர்.
இந்நிலையில் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கேரள ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் கொடியேற்றிய பிறகு உரையாற்றிக்கொண்டிருந்தார். அப்போது அருகில் நின்று கொண்டிருந்த திருவனந்தபுரம் காவல் ஆணையர் தாமஸ் ஜோஸ் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக அங்கிருந்த காவலர்கள் மயங்கி விழுந்த காவல் ஆணையரை அங்கிருந்து வேறு இடத்திற்கு தூக்கி சென்றனர். இதனால் சிறுது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.