Sunday, December 7, 2025

கவிஞர் சினேகனின் தந்தை காலமானார்!!

மிழ் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞருமான சினேகனின் தந்தை சிவசங்கு வயது மூப்பு காரணமாக தஞ்சாவூர் புது காரியாபட்டியில் உள்ள இல்லத்தில் இன்று அதிகாலை காலமானார்.

இது குறித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் “நட்புக்குறிய திரையுலக நண்பர்களுக்கும், ஊடகத்துறை நண்பர்களுக்கும் / அனைத்து கட்சி அரசியல் தோழர்களுக்கும் வணக்கம் . எனது தந்தையார் இன்று அதிகாலை 4.30 மணிக்கு காலமாகி விட்டார், என்ற துயர தகவலை தெரிவித்து கொள்கிறேன். நாளை காலை 11 மணிக்கு தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எனது சொந்த கிராமம் புதுக்கரியப்பட்டியில் நல்லடக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.

பாடலாசிரியர் சினேகன் தந்தை மறைவுக்கு திரை உலகினர்,மேலும், பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News