பாஜகவின் மூத்த தலைவரும், கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான எடியூரப்பா தனது 17 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. புகாரின் பெயரில் அடிப்படையில் எடியூரப்பா மீது பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தன் மீதான போக்சோ வழக்கை ரத்து செய்யக் கோரி கா்நாடக உயர்நீதிமன்றத்தில் எடியூரப்பா மனுதாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் எடியூரப்பா மீதான போக்சோ வழக்கை ரத்து செய்ய முடியாது என தெரிவித்துள்ளது. இருப்பினும் கைது நடவடிக்கையில் இருந்து தற்காத்துக்கொள்ள எடியூரப்பாவுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.