Monday, February 10, 2025

ரூ.725 கோடிக்கு மது விற்பனை செய்ததுதான் திராவிட மாடலின் சாதனை – அன்புமணி ராமதாஸ்

பொங்கலையொட்டி 725 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டது தான் திராவிட மாடலின் சாதனை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் பொங்கலையொட்டி, 725 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகியிருப்பதாக வெளியான தகவல், நிச்சயம் மகிழ்ச்சியளிக்கும் செய்தி அல்ல என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் இன்னும் அதிக குடும்பங்கள் கண்ணீர் வடித்திருக்கின்றன என்பதையே இந்த செய்தி காட்டுகிறது. மது வணிகம் 47 கோடி ரூபாய் அதிகரித்திருக்கிறது என வேதனை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டு இளைஞர்களை நிரந்தர குடிகாரர்களாக்கியது மட்டும் தான் திராவிட மாடல் அரசின் சாதனை என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுக்கடைகளை திறந்து வைத்து இளைஞர்களையும், மாணவர்களையும் மதுவுக்கு அடிமையாக்கி வருகிறார் எனவும் சாடியுள்ளார்.

Latest news