சென்னையில் தெரு நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்கள் கடிப்பதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் இரு சக்கர வாகனங்களில் செல்வோரையும் நாய்கள் கடிப்பதால் அவர்கள் விபத்துக்களில் சிக்கும் சம்பவங்கள் நடக்கின்றன. இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சி நாய் வளர்போருக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி வாக்கிங் கூட்டிச் செல்லும் போது நாய்களுக்கு வாய்மூடி போட வேண்டும். ரேபிஸ் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். நாய் வளர்ப்பதற்கு உரிமம் பெற்றிருக்க வேண்டும் என்பன போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இந்த உத்தரவு ஏற்கனவே நடைமுறையில் இருந்த போதும் பலரும் இதனை கடைபிடிக்கவில்லை. இதனையடுத்து வாய்மூடி அணிவிக்காமல் நாய்களை வாக்கிங் கூட்டி வருபவர்களுக்கு 1,000 ரூபாய் அபராதம் விதிப்பதற்கு சென்னை மாநகராட்சி ஆலோசித்து வருகிறது.