ரயில் பாதை அமைக்கக் கடலை மிட்டாய் உதவிய நூதன வீடியோ இணையத்தை ஆச்சரியத்தில் மூழ்கவைத்துள்ளது.
சாலைகள், ரயில் பாதைகள் அமைப்பதற்கு மண், கருங்கல் ஜல்லிகள், சிமெண்ட் கலவை போன்றவற்றைத்தான் காலங்காலமாகப் பயன்படுத்தி வருகின்றனர் என்பதை நாம் அறிவோம். ஆனால், ஒரு விநோத முயற்சியாகக் கடலை மிட்டாய் பயன்படுத்தியுள்ளனர்.
வேர்க்கடலை, வெல்லப்பாகு கலந்து தயாரிக்கப்படும் கடலை மிட்டாயின் சுவையோ அபரிமிதமாக இருக்கும். கடலை மிட்டாய் என்று சொன்னதுமே உமிழ்நீர் ஊறும். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, ஆரோக்கியமானவர்கள் முதல் நோயாளிகள் வரை அனைத்துத் தரப்பினரும் விரும்பி சுவைப்பது கடலை மிட்டாயைத்தான்.
அநேகம் பேருக்கு மதிய உணவு சாப்பிட்ட பின், கடலை மிட்டாய் தின்றால்தான் சாப்பிட்ட திருப்தியே ஏற்படும். செரிமானத்தை அதிகரிப்பதற்காக கடலை மிட்டாய் தின்பதை வழக்கமாக வைத்திருப்பவர்கள் இவர்கள்.
ஆனால், மகாராஷ்டிராவையும் இந்திய ரயில்வே வளர்ச்சியையும் பிரிக்க முடியாத வகையில் தொடர்புடையது அந்தக் கடலை மிட்டாய்.
அதெப்படி என்றுதானே கேட்கிறீர்கள்…. வாருங்கள் அந்த வீடியோவைப் பார்க்கலாம்.
19 ஆம் நூற்றாண்டில் மும்பை மற்றும் லோனா வாலா நகரை இணைக்கும் வகையில் இருப்புப் பாதை அமைக்க விரும்பினர். இதற்காக, 1000 தொழிலாளர்களைப் பணியில் ஈடுபடுத்தினர். மலைகளுக்கு இடையே தண்டவாளம் அமைப்பது கடினமான வேலையாக இருந்தது.
அப்போது லோனா வாலா பகுதியில் இருந்த மகன்லால் அகர்வால் என்ற கடலை மிட்டாய் வியாபாரி புதுமையாக சிந்திக்கத் தொடங்கினார். அதன்பலனாக, அதிக கலோரி கொண்ட, விலை மலிவான கடலை மிட்டாய் தயாரிக்கத் தொடங்கினார்.
வேர்க்கடலை, வெல்லப் பாகு ஆகியவற்றுடன் நெய் சேர்த்து வலுவான கடலை மிட்டாய்களைத் தயாரித்தார். அவற்றைப் பயன்படுத்தி வெற்றிகரமாக தண்டவாளம் அமைக்கப்பட்டு இருப்புப் பாதை போடப்பட்டது.
கடலை மிட்டாயின் வலிமை, உறுதியைக்கண்டு மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்றனர் பிரிட்டிஷ் அதிகாரிகள். அதனால், அந்த வழித்தடத்தில் சென்ற ரயிலில் கடலை மிட்டாய் விற்பனை செய்ய மதன்லால் அகர்வாலுக்கு அனுமதியளித்தனர்.
உலகிலேயே முதன்முறையாகக் கடலை மிட்டாயைப் பயன்படுத்தி இருப்புப் பாதை அமைத்தது இந்தப் பகுதியாகத்தான் இருக்கும்.