Paytm நிறுவனத்தின் இணை நிறுவனமான பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க் லிமிடெட் வங்கி உரிமத்தை இந்திய ரிசர்வ் வங்கி ஏப்ரல் 24, 2026 முதல் ரத்து செய்துள்ளது.ஆனால் நாம் பயன்படுத்தும், Paytm APP , Paytm UPI , ரீசார்ஜ், பில் பேமெண்ட் போன்ற சேவைகள் வழக்கம் போல் எந்தத் தடையும் இன்றிச் செயல்படும் என
உறுதியளித்துள்ளது.மேலும் Paytm QR , சவுண்ட்பாக்ஸ் , கார்டு மெஷின்கள் மற்றும் Payment Gateway போன்ற சேவைகளும் தடையின்றி இயங்கும். ஏனெனில் இவை மற்ற வங்கிகளுடன் இணைந்து செயல்படுகின்றன.
Paytm நிறுவனம் ஏற்கனவே Paytm Payments Bank Ltd .வங்கியுடனான தனது வணிகத் தொடர்புகளைத் துண்டித்துவிட்டது. இந்த உரிமம் ரத்து நடவடிக்கையினால் பேடிஎம் நிறுவனத்திற்குப் நிதி ரீதியாகப் பெரிய பாதிப்பு ஏதும் இல்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக ரிசர்வ் வங்கி சுட்டிக்காட்டிய குறைபாடுகளைச் சரிசெய்ய பேடிஎம் வங்கி தவறிவிட்டது. குறிப்பாக, வங்கி ஒழுங்குமுறைச் சட்டம் 1949-ன் விதிகளின் கீழ் செயல்படவில்லை என்று ஆர்பிஐ கூறியுள்ளது.மேலும் வாடிக்கையாளர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் பணிகளில் கடுமையான குளறுபடிகள் இருந்தன. ஒரு பான் கார்டை வைத்து ஆயிரக்கணக்கான கணக்குகள் தொடங்கப்பட்டிருந்தது போன்ற பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் கண்டறியப்பட்டன.
இதனால் வங்கியிடம் வாடிக்கையாளர்களின் டெபாசிட் தொகையைத் திருப்பி அளிக்கப் போதுமான நிதி இருப்பதாக ஆர்பிஐ உறுதி அளித்துள்ளது.ரிசர்வ் வங்கி இப்போது இந்த வங்கியை முழுமையாக மூடுவதற்கான நடவடிக்கையை உயர் நீதிமன்றத்தின் மூலம் மேற்கொள்ள உள்ளது.இது பேடிஎம் வங்கிக்கு வைக்கப்பட்ட தடையே தவிர, நாம் அன்றாடம் பயன்படுத்தும் பேடிஎம் செயலிக்கு வைக்கப்பட்ட தடை அல்ல. எனவே, நீங்கள் பயமில்லாமல் ஆப் மூலம் யுபிஐ பணப்பரிமாற்றங்களைச் செய்யலாம்.
