விமான பயணி செய்த விபரீதம் 

336
Advertisement

செப்டம்பர் 23 அன்று பெயர் குறிப்பிடப்படாத பயணி ஒருவர் , மத்திய சீனாவின் ஹூபே மாகாணத்தின் தலைநகரான வுஹான் தியான்ஹே சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஜியாமென் ஏர்லைன்ஸ்ல் பயணம் செய்தார்.

விமானத்தில் இருந்த கேபின் பணியாளர்களின் தகவலின்படி , பயணிகள் போர்டிங் முடிவில் இந்த சம்பவம் நடந்தது.

பயணிகளின் விவரங்களை சரிபார்த்தபின் , விமானம் புறப்புடுவதிற்கு  தயாராகிக் கொண்டுஇருந்தது. பயணிகள் தங்கள் இருக்கைகளில் அமர்த்துருந்தனர். விமானம் சிரியவகை விமானம் என்பதால் , விமானப்பணிப்பெண் அவசரகால பயன்பாடு கதவின் அருகில் உள்ள பயணிகளை ,கதவில் உள்ள கைபிடிகளை தொடவேண்டாம் என முன்னரே எச்சரித்ததாக தெரிகிறது.

இந்நிலையில் பெண் பயணி ஒருவர் , விமான கேபினில் கற்று வரவில்லை , அடைத்துவைத்ததுபோல உணர்ந்ததாகவும்  ‘புதிய காற்றை’ பெறுவதற்காக அவசரகால வாசலைத் திறந்ததாகவும் கூறியுள்ளார்.

இதன் காரணமான ஒருமணி நேரம் விமானம் தாமதம் ஆகியது. சப்மத்தப்பட்ட பெண் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று  வருகிறது.,

இம்மாத  தொடக்கத்தில், குடிபோதையில் இருந்த பயணி ஒருவர் ஈஸிஜெட் விமானத்தில் இருந்து விமானத்தின் கதவை உடைத்து திறக்க முயந்ததாக தகவல் வெளியாகியது என்பது குறிப்பிடத்தக்கது,

.