Monday, January 20, 2025

மோசமான வானிலை : தாமதமாக வந்த 100க்கும் மேற்பட்ட விமானங்கள்

மோசமான வானிலை காரணமாக டெல்லி விமான நிலையத்தில் 100 க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக வந்துள்ளன.

தலைநகர் டெல்லியில் கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 7 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும் 60 விமானங்கள், வந்து சேர வேண்டிய 193 விமானங்கள் பனி மூட்டம் காரணமாக தாமதமாகின. கொல்கத்தா விமான நிலையத்தில், அங்கிருந்து புறப்பட வேண்டிய 17 விமானங்களும், வர வேண்டிய 36 விமானங்களும் பனி மூட்டம் காரணமாக தாமதமாகின.

Latest news