‘சிஸ்டம்’ படத்தில் அபார நடிப்பு.. சிறந்த நடிகைக்கான விருது…

அமேசான் ஒரிஜினல் திரைப்படமான சிஸ்டம் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நடிகை ஜோதிகா, 2026-ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகைக்கான ஐகானிக் கோல்ட் ஸ்ட்ரீமிங் விருது (விமர்சகர்கள் தேர்வு) பெற்றுள்ளார்.

இயக்குநர் அஸ்வினி ஐயர் திவாரி இயக்கிய இந்த படத்தில் நடிகை சோனாக்ஷி சின்காவுடன் இணைந்து நடித்துள்ள ஜோதிகா, ‘சரிதா’ என்ற கதாபாத்திரத்தில் உணர்வுபூர்வமான மற்றும் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளை குவித்துள்ளார்.

இந்த திரைப்படத்தில், சமூக அமைப்பின் சிக்கல்களில் இருந்து தப்பித்து, தனது குடும்பத்தையும் தன்னையும் பாதுகாக்க போராடும் நடுத்தர வர்க்கப் பெண்ணாக ஜோதிகா நடித்துள்ளார்.

தைரியம், பொறுப்பு, உணர்ச்சி ஆகியவற்றை ஒருங்கிணைத்த அவரது இயல்பான நடிப்பு, ரசிகர்களையும் விமர்சகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த கதாபாத்திரத்தின் மூலம் சவாலான மற்றும் வித்தியாசமான வேடங்களை திறம்பட கையாளும் தனது திறமையை ஜோதிகா மீண்டும் நிரூபித்துள்ளார்.

மொழி எல்லைகளைத் தாண்டி, ஒவ்வொரு படமும் புதுமையான கதைக்களத்தையும் வலுவான கதாபாத்திரத்தையும் கொண்டிருக்க வேண்டும் என்ற தனது கலைநோக்கில் ஜோதிகா தொடர்ந்து பயணித்து வருகிறார்.

அவரது அர்ப்பணிப்பு, கடின உழைப்பு மற்றும் தரமான நடிப்புக்குக் கிடைத்த முக்கிய அங்கீகாரமாக இந்த விருது கருதப்படுகிறது. ஏற்கனவே பல விருதுகளை வென்றுள்ள ஜோதிகாவின் திரைப்பயணத்தில், இந்த புதிய கவுரவம் மேலும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.

Related News

Latest News