தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் – இந்திய வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடப்பட்டுள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் : வங்கக்கடலில், பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில், காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் இலங்கை மற்றும் தமிழக கடற்கரை பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.

இதன் காரணமாக தமிழகத்தில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடப்பட்டுள்ளது.

Related News

Latest News