3 வேளையும் நூடுல்ஸ்….விவாகரத்து கேட்ட கணவர்

226
Advertisement

3 வேளையும் தன் மனைவி நூடுல்ஸ் மட்டுமே சமைத்துத் தருவதால்
விவாகரத்து தாருங்கள் என்று நீதிமன்றத்தை நாடியுள்ளார் ஒருவர்.

அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கும் இந்த சம்பவம்
கர்நாடக மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.

அண்மையில் பெல்லாரி மாவட்ட நீதிமன்றத்துக்கு மனைவியிடமிருந்து
விவாகரத்து கேட்டு ஒருவர் வந்திருந்தார். நீதிபதியிடம் அவர் அளித்துள்ள
மனுவில், என் மனைவிக்கு நூடுல்ஸைத்தவிர, வேறெதுவும் சமைக்கத்
தெரியவில்லை. காலை, மதியம், இரவு என்று 3 வேளையும் நூடுல்ஸ்
மட்டுமே சமைத்துத் தருகிறார். மளிகைக் கடைக்குச் சென்றால்கூட
நூடுல்ஸ் மட்டுமே வாங்குகிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனை மேகி வழக்கு என்று குறிப்பிட்டுள்ள முதன்மை மாவட்ட மற்றும்
அமர்வு நீதிபதி, கணவன் மனைவி இருவரும் மனம் ஒத்து விவாகரத்துப்
பெற்றுக்கொண்டனர் என்று கனத்த இதயத்தோடு தெரிவித்துள்ளார்.
திருமணத்துக்கு வரன் பார்க்கும்போதே கைநிறைய, கௌரவமாக
சம்பாதிக்கும் ஆணின் உத்தியோகம் பற்றி அறிந்துகொள்வதும்,
பெண்ணுக்கு நன்றாக சமைக்கத் தெரியுமா என்பது பற்றிப்
பெற்றோரிடம் வினவுவதும் வழக்கமாக இருந்துவருகிறது. ஆனால்,
உணவால் பிரிந்துள்ளது இந்தத் தம்பதி.