பெண்களே இல்லையாம்… டேட்டிங் செயலிமீது இளைஞர் வழக்கு

463
Advertisement

டேட்டிங் செயலியில் பெண்களே இல்லையென்று அந்நிறுவனம் மீது அமெரிக்க இளைஞர் ஒருவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

டேட்டிங் செயலியில் ஏராளமான பெண்கள் பதிவுசெய்திருப்பதாக விளம்பரம் செய்து ஏமாற்றிவிட்டதாக டேட்டிங் செயலி நிறுவனம்மீது அந்த நபர் புகார் அளித்துள்ளார்.

அமெரிக்காவின் கொலராடோ பகுதியைச் சேர்ந்த 29 வயது இளைஞரான இயன் கிராஸ் டேட்டிங் சேவைக்காக 9 ஆயிரத்துக்கும் அதிகமான டாலரை சந்தாத் தொகையாக The Denvar Dating Co என்னும் நிறுவனத்துக்குக் கொடுத்துள்ளார். ஆனால், அவர் எதிர்பார்த்த எண்ணிக்கையில் பெண்கள் அந்நிறுவனத்தில் பதிவுசெய்யவில்லையாம்.

18 வயதுமுதல் 35 வயதுவரையுள்ள ஐந்து பெண்கள் மட்டுமே அந்த சேவைத்தளத்தில் உறுப்பினர்களாகியுள்ளனர். இதனால், ஏமாற்றமடைந்த இயன்கிராஸ் அந்நிறுவனத்தில் புகார் அளித்துள்ளார். டேட்டிங் செயலி நிறுவனமோ 25 வயதுமுதல் 35 வயதுவரையுள்ள பெண்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர் என்று தெரிவித்துள்ளது.

அதைத் தொடர்ந்து தன்னுடைய வழக்கறிஞர்மூலம் சந்தாத் தொகையைத் திரும்பப் பெற்றுக்கொண்டுள்ளார் அந்த இளைஞர். ஆனாலும், திருப்தியடையாத அந்த இளைஞர் தவறான தூண்டுதல் மற்றும் ஏமாற்றும் வர்த்தக நடைமுறைகளைப் பின்பற்றியதாகக்கூறி டேட்டிங் நிறுவனம்மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்.

வேடிக்கையாக இருக்கிறது இயன் கிராஸின் செயல்..

நண்பர்களுடன் நேரில் உரையாடுவது மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தரும் ஆரோக்கியமான விஷயம். ஆனால், இந்த நூற்றாண்டில் தகவல் தொழில்நுட்பங்கள் நண்பர்களை செல்போனில் தேடவைத்துவிட்டன. இன்னும் ஒருபடி மேலேபோய் திருமண வரன்களையே தேடுமளவுக்கு பல செயலிகள் வந்துவிட்டன..

1995 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட Match.com என்ற இணைய தளமே டேட்டிங்கிற்காகத் தொடங்கப்பட்ட முதல் செயலி. தற்போது Bumble,Bumble, Tinder, OKCupid,OKCupid, Hinge,Hinge, Cofffee Meets Begal, Happn, The League, Her உள்பட பல செயலிகள் டேட்டிங் பயன்பாட்டுக்காக இயங்கிவருகின்றன.

ஒட்டுமொத்தமாக உலகம் முழுவதும் ஒருகோடிபேர் இந்த செயலிகளில் உறுப்பினர்களாக உள்ளதாகக் கூறப்படுகிறது.