நடிகர் விஜய்க்கு சென்னையின் பல பகுதிகளில் வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக சாலிகிராமத்தில் உள்ள அவரது வீடு இடிக்கப்பட உள்ளதாகவும், அந்த இடத்தில் புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்ட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த வீட்டில் தற்போது எஸ்.ஏ. சந்திரசேகர் அலுவலகம் ஒரு பகுதியில் இயங்கி வருவதுடன், மற்றொரு பகுதியில் விஜய் ஆண்டனியின் ஸ்டுடியோ செயல்பட்டு வருகிறது.
சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் விஜயின் “தமிழக வெற்றிக் கழகம்” 234 தொகுதிகளிலும் போட்டியிட்டது. தேர்தலுக்கு முன் அவர் தாக்கல் செய்த சொத்து விபரங்களில், சுமார் 115 கோடி மதிப்பிலான வீடுகள் மற்றும் வணிக சொத்துகள் உள்ளதாக தெரிவித்துள்ளார். தற்போது அவர் நீலாங்கரையில் வசித்து வருகிறார். மேலும் சாலிகிராமம், மைலாப்பூர், எக்மோர் பகுதிகளில் வீடுகள் மற்றும் தி.நகர் பகுதியில் வணிக வளாகங்களும் உள்ளன. கொடைக்கானல் அருகே விவசாய நிலமும் அவருக்கு சொந்தமாக உள்ளதாம்.
அதே நேரத்தில், அவரது மனைவி சங்கீதா விவாகரத்து மனு தாக்கல் செய்துள்ளதாகவும், இந்த வழக்கு ஜூன் 15 அன்று செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, ஜீவனாம்சம் வழங்கும் தேவையால் விஜய் தனது சொத்துகளை விற்பனை செய்து வருவதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. மேலும், சங்கீதா பெயரில் 15 கோடி மதிப்பிலான சொத்துகளும் வாங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
