15 ஆண்டு பழமையான வாகனங்களுக்கு, மார்ச் 31ம் தேதிக்கு பின், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எந்தவிதமான எரிபொருளும் நிரப்பப்பட மாட்டாது என, டில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மன்ஜிந்தர் சிங் சிர்சா தெரிவித்துள்ளார்.
15 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான வாகனங்களை கண்டறியக்கூடிய சாதனத்தை நிறுவி கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே போல டில்லியில் தற்போது பொது போக்குவரத்துக்கு சி.என்.ஜி., பஸ்கள் பயன்பாட்டில் உள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் அவற்றை அகற்றிவிட்டு, அதற்கு மாற்றாக மின்சார பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
உலக அளவில் மிகவும் மோசமான காற்று மாசு உள்ள நகரங்களில், டில்லி இரண்டாம் இடத்தில் உள்ளது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.