Adobe Photoshop, Premiere Pro, Illustrator, Microsoft Word, Excel எனப் பிரபலமான மென்பொருட்களைப் பயன்படுத்த இனி மாதந்தோறும் சந்தா கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லாமல் போகுமா? இந்தக் கேள்வியை எழுப்பியிருக்கிறார் மென்பொருள் பொறியாளர் Brandon Thomas!
Adobe நிறுவனத்தின் சந்தா கட்டணங்கள் மற்றும் ரத்து செய்யும் நடைமுறைகளால் அதிருப்தியடைந்த இவர், அதற்கு மாற்றாக இலவச மென்பொருட்களை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
இதற்காக Anthropic நிறுவனத்தின் Claude AI உதவியுடன், Rust நிரலாக்க மொழியைப் பயன்படுத்தி ArtCraft என்ற திட்டத்தை உருவாக்கியுள்ளார்.
இதில் Photoshop-க்கு PhotoCraft, Premiere Pro-க்கு FilmCraft, Illustrator-க்கு VectorCraft, Lightroom-க்கு LightCraft, After Effects-க்கு EffectCraft, InDesign-க்கு DesignCraft, Acrobat-க்கு PdfCraft என ஏழு மாற்று செயலிகளை உருவாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், Microsoft நிறுவனத்திற்கும் சவால் விடும் வகையில் WordCraft, DeckCraft, GridCraft என Word, PowerPoint, Excel ஆகியவற்றுக்கு மாற்றுகளையும் அறிமுகப்படுத்தியுள்ளார். இதில் குறிப்பாக கணணிக்கப்படுவது என்னவென்றால் இவை அனைத்தும் இலவசமாக இணையதளத்தில் இருக்கிறது.
இவருக்கு 15 ஆண்டுகளுக்கும் மேலான மென்பொருள் பொறியியல் அனுபவமும், 10 ஆண்டுகளுக்கும் மேலான Rust அனுபவமும் இருப்பதாக Reddit பதிவில் தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்த மென்பொருட்கள் இன்னும் ஆரம்பகட்ட வளர்ச்சி நிலையில்தான் உள்ளன. Adobe, Microsoft மென்பொருட்களுக்கு இணையான தரம், பாதுகாப்பு, வேகம் மற்றும் வசதிகளை வழங்குமா என்பது இன்னும் கேள்விக்குறிதான். இவை எப்படி செயல்பட போகிறது என்பதை வரும் காலங்களில் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
