16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை காலை 11 மணிக்கு முன்பாகவோ இரவு 11 மணிக்கு பிறகோ திரையரங்கிற்குள் அனுமதிக்கக் கூடாது என தெலங்கானா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிகாலை, நள்ளிரவில் படம் பார்ப்பது மனதளவில் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என நீதிபதி விஜய்சென் ரெட்டி கருத்து தெரிவித்துள்ளார்.
அம்மாநிலத்தில் திரைப்பட டிக்கெட் விலை உயர்வு மற்றும் சிறப்பு காட்சிகளுக்கான அனுமதி தொடர்பான மனு மீதான விசாரணைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.