Thursday, April 24, 2025

ஆணவ ‘டெல்லியை’ அடக்கிய ரோஹித் ‘Captain’ மாற்றமா? நீதா அம்பானி பதில்!

தமிழ் ஹீரோக்கள் போல ஆரம்பத்தில் அடிவாங்கிய சென்னை, மும்பை, ஹைதராபாத் அணிகள் தற்போது திருப்பியடிக்க ஆரம்பித்து இருக்கின்றன. இதனால் சித்திரை வெயிலைக் காட்டிலும், IPL தொடரில் அனல் பறக்கிறது.

நடப்பு தொடரில் முதல் அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ், தங்களுடைய கேப்டனை மாற்றியுள்ளது. முன்னதாக லக்னோ, மும்பை அணிகளில் கேப்டன் மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் சத்தமில்லாமல் CSK கேப்டனை மாற்றி, ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது.

இந்தநிலையில் சென்னை போல மும்பையிலும், ஒரு கேப்டன் மாற்றம் இருக்கலாம் என கூறப்படுகிறது. டெல்லிக்கு எதிரான போட்டியில் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவின் 2 முக்கிய முடிவுகள், மும்பையின் வெற்றியை உறுதி செய்தன.

13வது ஓவர் முடிந்ததும் புதிய பந்தை பயன்படுத்துமாறு, அம்பயர் ஹர்திக் பாண்டியாவிடம் கூறினார். அப்போது டக் அவுட்டில் இருந்த ரோஹித் புதிய பந்தில் ஸ்பின் பவுலரை பயன்படுத்துமாறு, பந்துவீச்சு பயிற்சியாளர் Paras Mhambrey மற்றும் தலைமை பயிற்சியாளர்  Mahela Jayawardene, இருவரிடம் ஆலோசனை வழங்கினார்.

இதற்கு கைமேல் பலனாக கரண் சர்மா பந்துவீச்சில் ஆபத்தான, Tristan Stubbs வெளியேறினார். இதேபோல போல்ட், பும்ரா இருவருக்கும் ஓவர்கள் மிச்சம் இருந்தபோதிலும், கரணுக்கு மீண்டும் ஓவரை கொடுக்கும்படி ஹர்திக்கிடம் கேட்டுக்கொண்டார்.

அவரது கணிப்பு நிஜமானது. சென்னை, பெங்களூருவை சிதறடித்த கேஎல் ராகுல் கரண் சர்மாவின் சுழலில், அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதுவே மும்பைக்கு மிகப்பெரும் திருப்புமுனையாக அமைந்தது. ரோஹித்தின் இந்த 2 முடிவுகளும் அணி நிர்வாகத்திடமும், ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்தநிலையில் கோவிலுக்கு வழிபட சென்ற மும்பை இந்தியன்ஸ் அணி உரிமையாளர், நீதா அம்பானியை ரசிகர் ஒருவர் வழிமறித்து, ”மீண்டும் ரோஹித் சர்மாவை கேப்டனாக அறிவிக்க வாய்ப்பு இருக்கிறதா?”, என்று கேட்டார். பதிலுக்கு நீதா, ”எல்லாம் கடவுளின் ஆசி” என பதில் அளித்துள்ளார்.

இதைப்பார்த்த ரசிகர்கள், ”சென்னை போல நீங்களும் கேப்டனை மாத்திருங்க,” என்று, சமூக வலைதளங்களில் மும்பை அணிக்கு, கோரிக்கை விடுத்து வருகின்றனர். சென்னை பாணியில் மும்பையும் தங்களது கேப்டனை மாற்றுமா?, என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Latest news