2025-26ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்தியில் பாஜக 3வது முறையாக ஆட்சியமைத்தபின் தாக்கல் செய்யப்படும் 2வது பட்ஜெட் இதுவாகும்.
இந்த பட்ஜெட்டில் இன்று மாத ஊதியதாரர்களுக்கு இனிப்பான செய்தி வர அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. நேற்று செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி, ஏழை, நடுத்தர மக்களை கடவுள் லட்சுமி ஆசீர்வதிக்கட்டும் எனக் கூறினார்.
2025-26ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்யவுள்ளார். இதன் மூலம், தொடர்ச்சியாக 8 வது முறை பட்ஜெட் தாக்கல் செய்த முதல் நிதியமைச்சர் என்ற பெருமையை அவர் பெறவுள்ளார்.