உடல் எடை குறையனுமா? ஒரு கப் காபி போட்டு குடிங்க

369
Advertisement

காபி குடிப்பது நல்லதா கெட்டதா, ஏதாவது ஒன்னு சொல்லுங்கப்பா என மக்களே குழம்பி போகும் அளவிற்கு தான் காபியை பற்றி வெளிவரும் தகவல்களும் உள்ளன.

பசியை கட்டுப்படுத்தும் காபியால், குறைவான கலோரிகள் தான் உட்கொள்ளப்படுவதால் உடல் எடை குறைதல் சாத்தியமாகிறது.

மேலும், உடற்பயிற்சி செய்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் காபி குடிப்பதால் சிறப்பாக workout செய்ய energy கிடைப்பதோடு, மகிழ்ச்சியை அதிகரிக்கும் டோபமைன் (dopamine) ஹார்மோன்களும் சுரக்க தொடங்கி அதிகமான கலோரிகளை குறைக்க முடிகிறது.

அது மட்டுமில்லாமல் காபி ஞாபக சக்தி, நல்ல மனநிலை மற்றும் சுறுசுறுப்பாக மூளை இயங்குவதை உறுதி செய்கிறது.

காபியில் B2, B5, B3 போன்ற விட்டமின்களும், உடலுக்கு தேவையான பொட்டாசியம்  மற்றும் manganeseஉம் உள்ளது. பார்கின்சன்ஸ், type 2 diabetes மற்றும் கல்லீரல் புற்றுநோய் பாதிப்பு விகிதத்தை குறைப்பதில் காபி கணிசமான பங்கு வகிப்பதாக கூறும் மருத்துவர்கள், நாளொன்றுக்கு மூன்று கப் காபி குடிப்பது இதய நோய் போன்ற எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என கருத்து தெரிவிக்கின்றனர்.

மேலும், காபியில் அதிக சக்கரை சேர்த்து குடிப்பது நீரிழிவு நோய்க்கு வழி வகுக்கும் என கூறும் உணவியல் நிபுணர்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் காபி அருந்துவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்துகின்றனர்.