நாம் தமிழர் கட்சியின் நட்சத்திர பேச்சாளரான காளியம்மாள் விஜயின் தமிழக வெற்றி கழகத்தில் இணைய உள்ளதாக தகவல் பரவிய நிலையில் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமானுடன் நிலவும் கருத்து முரண்பாடு காரணமாக அவர் தற்போது கட்சி நிகழ்வுகளில் இருந்து விலகியே இருக்கிறார். இதற்கிடையே அவரை தங்கள் பக்கம் கொண்டு வர திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட மாற்றுக்கட்சியினர் முயற்சி செய்தனர்.
இந்த நிலையில் தவெகவில் இன்று இணைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில் காளியம்மாள் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் மாற்றுக்கட்சியில் இணைவதாக இருந்தால் உங்களுக்கு தெரிவிப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.